ஜோதிகாவின் ஐம்பத்தோராவது படம்

இயக்குனர் வி.பிரியாவுடன் இணைகிறார் ஜோதிகா

V.Priya,Jyothika 04/02/2022 : ஜோதிகா இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின் தமிழ் முன்னணி நட்ச்சத்திரங்களோடு ஜோடியாக நடித்து பிரபலமானார். முன்னணி நடிகர் சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்தார். அவர் திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்துவிட்டு, மீண்டும் 2015ம் ஆண்டு 36 வயதினிலே படம் மூலம் நடிக்க வந்தார்.

அதைத் தொடர்ந்து மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், தம்பி போன்ற முக்கிய கதாபாத்திரம் கொண்ட கதைகளை தேர்ந்து நடித்தார்.ஜோதிகாவின் ஐம்பதாவது படமான ’உடன்பிறப்பே’ கடந்த வருடம் ஓ.டி.டி. தளமான அமேசானில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்து அவரின் ஐம்பத்தோராவது படத்தில் நடிக்க ஜோதிகா தயாராகி உள்ள நிலையில் இயக்குனர்கள் சிலர் அவரிடம் கதை சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘கண்ட நாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குனர் பிரியா சொன்ன கதைக்கு ஜோதிகாவிற்கு சம்மதித்துள்ளதாகவும், அதில் நடிக்க ஜோதிகா தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jyothika's 51st Movie