விஜய்சேதுபதியின் புதிய படம்

96 இரண்டாம் பாகம் ஆரம்பமாகவுள்ளது

Vijay Sethupathi, Trisha Krishnan 04/02/2022 : தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சென்னை 600028, தமிழ்ப்படம் , பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, தில்லுக்கு துட்டு, சதுரங்க வேட்டை, மாரி, கலகலப்பு போன்ற பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகின.

இந்த நிலையில் விஜய்சேதுபதி, திரிஷா முதன்முறையாக இணைந்து பகவதி பெருமாள்,தேவதர்ஷினி, ஜனகராஜ் ஆகியோருடன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் 96. இதை பிரேம்குமார் எழுதி இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்ததுடன் பல விருதுகளையும் வென்றது.

இந்த 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. படத்தின் இயக்குனர் பிரேம்குமாரை விஜய்சேதுபதி சந்தித்து 96 இரண்டாம் பாகம் தொடர்பாக கலந்துரையாடல் நடத்தியதாகவும், இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Sethupathi Next Movie