அமீர்,வெற்றிமாறன் கூட்டணி

அமீர்,வெற்றிமாறன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தது

Ameer, Vetrimaaran 03/02/2022 : வெற்றி இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனரான அமீர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் தன் பக்கம் திரும்ப வைத்தார். அதை தொடர்ந்து ஜீவாவின் ராம், கார்த்தியின் பருத்திவீரன், ஜெயம் ரவியின் ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

இவர் சுப்பிரமணியன் சிவாவின் இயக்கத்தில் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பரிமாணம் எடுத்தார். நீண்ட காலத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் தனுஷ்,கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோரோடு நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

இது குறித்து அமீர் வெளியிட்ட தகவலில், “எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது மேலும் அழகாக மாறுவதென்பது, இன்னொரு சிறந்த பார்வையாளனோடு கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் புதிய படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Ameer joins with Vetrimaaran