ஜெய்யின் ‘சிவா சிவா’ இன் புதிய பெயர்

ஜெய்யின் ‘சிவா சிவா’ தற்போது ‘வீரபாண்டியபுரம்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

Jai, Suseenthiran, Veerapandiyapuram 03/02/2022 : ஜெய் தற்போது ‘பிரேக்கிங் நியூஸ்’, ‘எண்ணித் துணிக ‘, ‘குற்றமே குற்றம்’, ‘பட்டாம்பூச்சி’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருக்கிறார். ஜெய் தற்போது வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘சிவா சிவா’ படத்திலும் நடித்து வருகிறார்.ஜெய் தற்போது நடிப்பில் மட்டுமின்றி இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சிவா சிவா படத்தின் இசையமைப்பாளரும் ஜெய் தான். அவருக்கு ஜோடிகளாக ஆகாங்ஷா ஷிங், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஜெயபிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தர் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகிறது.

முன்னதாக இப்படத்திற்கு ‘சிவா சிவா’ என்று பெயரிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, பெயர் ‘வீரபாண்டியபுரம்’ என மாற்றப்பட்டுள்ளது.
அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, கிராமம் சார்ந்த படம் என்பதால், ‘சிவா சிவா’ என்பதற்கு மாற்றாக மண் சார்ந்த கிராமத் தலைப்பைச் சேர்க்கலாம் என்ற எனது நண்பர்களின் ஆலோசனையை நானும் சம்மதித்ததால் படத்தின் பெயரை மாற்றியுள்ளேன் என நீண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப் பெயர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என தெரிவித்தார்.

Jai Movie Name Change