‘பத்து தல’ போஸ்டர் வெளியீடு

சிலம்பரசனின் ‘பத்து தல’ போஸ்டர் வெளியீடு

A R Rahman, Gautham Karthik, Pathu Thala, Priya Bhavani Shankar, Silambarasan 03/02/2022 : அண்மையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இது சிம்புவுக்கு சினிமாவில் மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தை கொடுத்தது. தற்போது நடிகர் சிம்பு கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Pathu Thala Movie Update

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த திரைப் படத்தில் நடிகர் சிம்பு (AGR) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிர கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ மேனன், கலையரசன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சில்லுனு ஒரு காதல்’, ’நெடுஞ்சாலை’, ‘ஹிப்பி’ போன்ற படங்களை இயக்கிய ஒ.என்.கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எடிட்டர் கே.எல்.பிரவீன் திரைப்படத்தை எடிட் செய்கிறார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய ‘பத்து தல’ அப்டேட்டுகள் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.