கோவில் வளாகத்துக்குள் பிரபல நடிகர் வாகனத்துடன் செல்ல அனுமதித்ததால் வெடித்த சர்ச்சை

Mohanlal, Tamil Cinema News 14 September 2021: தற்போது கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கோவில்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குருவாயூர் மற்றும் சபரிமலை கோவில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குருவாயூர் கோவில் வளாகத்துக்குள் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குருவாயூர் கோவிலுக்கு நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் சாமி கும்பிட வந்த நிலையில், அவரது காரை கோவில் வளாகத்துக்குள் செல்ல பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் அனுமதித்தனர். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இதையடுத்து மோகன்லால் காரை கோவில் உள்ளே அனுமதித்த ஊழியர்கள் 3 பேரை கோவில் நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

mohanlal, tamil cinema news 14 september 2021