விக்ரம் படத்தில் இன்னொரு வில்லனாக பிரபல நடிகர் ஒப்பந்தம்

Kamal, vikram, lokesh kanagaraj, Tamil Cinema 31 07 : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் ‘விக்ரம்’. நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில், பிரபல நடிகர் நரேனும், விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க இணைந்துள்ளார். மேலும் நடிகர் நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 2-வது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.