திருமண கோலத்தில் சாக்‌ஷி, இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Sakshi Agarwal, Tamil Actress Photos, 1st June 2021 : தமிழில் ஜெயிக்கிற குதிரை, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாக்க்ஷி அகர்வால்.

தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமடைந்த சாக்க்ஷி, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள சாக்க்ஷி, திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, புதிய நாள், புதிய லுக், புதிய தொடக்கம் என குறிப்பிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கருதி ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.