தனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல ரஜினிக்கு சிறப்பு அனுமதி!

Rajinikanth, Annaatthe, Tamil Cinema, 14 June 2021 : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்புக்களை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். மேலும் அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் ரஜினி. அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version