ஊரடங்கில் காதலியுடன் காரில் சுற்றிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு

Tiger Shroff, Disha Patani, Tamil Cinema : கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி வெளியே சுற்றிய பிரபல நடிகர் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், மற்றும் அவரது காதலி நடிகை திஷா பதானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகனை பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி, தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, நடிகை திஷா பதானி, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார். இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக இவர்கள் இருவர் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருவரும் காரில் சுற்றியதாகவும், போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது சரியான காரணத்தை தெரிவிக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tiger Shroff, Disha Patani, Tamil Cinema