ஜகமே தந்திரம் படத்துக்கு அங்கீகாரம் கொடுத்த ட்விட்டர்

Jagame Thandhiram, Dhanush, Trailer, Tamil Cinema 03 June 2021 : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஜகமே தந்திரம் டக்க்கு சிறப்பு emoji [] கொடுத்துள்ளது ட்விட்டர். மேலும் இது தனுஷ் படத்துக்கு ட்விட்டரிடம் இருந்து கிடைத்த முதல் அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.