அது வேற, இது வேற – ‘ஜகமே தந்திரம்’ படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

Jagame Thandhiram, petta, karthik subburaj : பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பேட்ட பட ரஜினியின் கெட்டப் போன்று ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் கெட்டப்பும் அமைந்துள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கும் தொடர்பு இருக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் பரவி வந்தது.

இது குறித்து விளக்கமளித்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் “பேட்ட படத்தில் வேலனாக நடித்திருந்த ரஜினியின் மகனாக ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் சுருளி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதா அல்லது பேட்ட ரஜினியின் இளம் வயது கதையாக ஜகமே தந்திரம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதா என்று என்னிடம் பலர் கேட்கின்றனர். ஆனால் பேட்ட படத்திற்கும் ஜகமே தந்திரம் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது வேறு கதை” என தெரிவித்துள்ளார்.

Jagame Thandhiram, petta, karthik subburaj,