ஜகமே தந்திரம் படத்தின் மாஸான டிரெய்லர் வெளியானது, ரசிகர்கள் கொண்ட்டாட்டம்

Jagame Thandhiram, Dhanush, Trailer, Tamil Cinema :இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.