தொடரும் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை தொடர்பில் நடிகை சமந்தா காக்கும் மவுனம் தொடர்பில் காரணம் வெளியானது

samantha, the family man 2, Samantha Akkineni, Tamil cinema : நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளநிலையில், தொடருக்கு தமிழர் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இத்தொடரில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இவற்றுக்கு மத்தியில் இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில், அமைதிக்கான காரணம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா, சர்ச்சைகளுக்கு பதிலளித்தால், அது இந்த தொடருக்கு, எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என இந்த தொடரின் தயாரிப்பு நிறுவனம் சமந்தாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். அதனால் தான் அவர் இந்த விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actress Samantha Kakkum's Silence Released Due To Controversy In The Family Man 2 Web Series