உலகளவில் 12 மொழிகளில் வெளியாகும் திரைப்படம்

RRR, Rajamouli, Ramcharan, Junior NTR : ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகளவில் 12 மொழிகளில் வெளியாகவுள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து மீண்டும் பிரம்மாண்ட பட்ஜெட்டில், ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, உலக அளவில் 12 மொழிகளில் வெளியாக உள்ளது.

RRR, Rajamouli, Ramcharan, Junior NTR