விரைவில் தெலுங்கு திரைத்துறையிலும் அறிமுகமாகும் கர்ணன் பட நாயகி

Rajisha vijayan, Karnan, Tamil Cinema : மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து தமிழில் கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து வரும் நடிகை ரஜிஷா விஜயன், விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

அங்கு பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார்.

Rajisha vijayan, Karnan, Tamil Cinema,