திரை இயக்குனரின் மகன் இறந்ததும் PSBB பள்ளியில்!

PSBB : பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பள்ளி குறித்த மேலும் பல தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அந்த பள்ளியில் ராஜகோபாலன் போலவே பல ஆசிரியர்கள் பாலியல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதே பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ’மாசிலாமணி’ ’வேலூர் மாவட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மனோகரின் மகன் ரஞ்சன் இறந்த விவகாரம் தற்போது இணையதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

அதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் மனோகரனின் மகன் ரஞ்சன் அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி பலியானார். நீச்சல் பயிற்சியாளர் கவனக்குறைவு காரணமாகவே ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த சம்பவத்தை அடுத்து நீச்சல் குள பயிற்சியாளர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் தற்போது 9 வருடங்கள் ஆகிறது.

PSBB latest news