தனுஷூடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிக் பாஸ் பிரபலம்!

Dhanush, Tamil Cinema : இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ’புதுப்பேட்டை’. இந்த படம் வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருப்பதாக சமீபத்தில் செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகையும் நடன இயக்குநரும், பிக் பாஸ் மற்றும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் ’புதுப்பேட்டை’ படத்தில் தான் முதலில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக நடிக்க முடியவில்லை என்றும் செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார். ’புதுப்பேட்டை’ படத்தில் சினேகா நடித்த கேரக்டரில் முதலில் காயத்ரி ரகுராம் தான் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும் அதன் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் அதனை அடுத்து தான் சினேகா இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பிக் பாஸ் மூலம் பெயரை கெடுத்து கொண்ட காயத்ரி ரகுராம், இந்த நடித்திருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Pudhupettai