அவர் சொன்னால் …. – நடிகை காஜல் அகர்வால்

Kajal Aggarwal, Tamil Cinema : தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், தொடர்ந்து அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

கடந்த ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கரம்பிடித்த அவர், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்த்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய காஜல் அகர்வால், சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் “நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது எனது கணவரும், குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறேன்” றன தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal, Tamil Cinema