ஜெயம்ரவி மீண்டும் ‘ஜன கன மன’ பட இயக்குனருடன் கூட்டணி

Jayam Ravi, Jana Gana Mana, Tamil Cinema : ஜெயம் ரவி வசம் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’, அஹ்மத் இயக்கும் ‘ஜன கன மன’ ஆகிய படங்கள் உள்ளபோதும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கும் சாத்தியங்கள் இல்லாமல் உள்ளது.

‘ஜன கன மன’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், அதே இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் இந்தியாவிலேயே நடத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என்று தெரிவிக்கப்டுகிறது.

Jayam Ravi, Jana Gana Mana, Tamil Cinema,