“வீரம்” படத்தின் இந்தி ரீமேக்கிலும் மாஸ் ஹீரோ

Veeram, Ajith, Ajithkumar : தமிழில் சிவா – அஜித் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றி வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “வீரம்”.

தமிழை தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியிலும் வீரம் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. இந்தி ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்துக்கு ‘பை ஈத் கபி தீவாளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

salman khan