‘விக்ரம்’ படத்தில் இருந்து முக்கிய நபர் விலகல்

Kamal, vikram, lokesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் ‘விக்ரம்’. நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகி உள்ளாராம். லோகேஷ் கனகராஜுடன் ​மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய சத்யன் சூரியன், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விக்ரம் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக விஜய்யின் சர்கார் படத்தில் பணியாற்றிய கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Cinematographer sathyan