நயன்தாரா எடுத்த புது முடிவு!

Nayanthara, Tamil Cinema : தமிழ் திரையுலகில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளவர் நடிகை நயன்தாரா. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படங்களுக்கு பிறகு கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களும் நயன்தாராவை முதன்மைப்படுத்தியே வந்தன. தற்போது நயன்தாரா கைவசம் உள்ள நெற்றிக்கண் படத்தில் அவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

Nayanthara, Tamil Cinema,