ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் காஜல் அகர்வாலின் 7 படங்கள் இதோ

Kajal Aggarwal : கொரோன காரணமாக பல திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏட்பட்டுள்ளமை தெரிந்ததுவே. இந்நிலையில் தான் நடித்த படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் நடிகை காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளாராம்.

காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. இதையடுத்து ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவை அனைத்தும் ரிலீசாகாமல் முடங்கிப் போய் உள்ளது.

பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, மேலும் 2 தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படங்களும் சில பிரச்சினைகளால் முடங்கி உள்ளன. தான் நடித்துள்ள படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் நடிகை காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளாராம்.

Kajal Aggarwal