ரஜினி, விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம்

Vijay Sethupathi : பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், தொடர்ந்து விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இந்நிலையில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi