அடுத்த பிக் பாஸ் சீசனில் ஷிவாங்கி!

Sivaangi, Cooku with Comali, Bigg Boss Tamil 5 : பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலையில், ஷிவாங்கி அடுத்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முன்னதாக அடுத்த பிக் பாஸ் சீசனில் குக் வித் கோமாளி புகழை களமிறக்க திட்டமிட்டிருந்தபோதும், தற்போது புகழ் அதிகமான திரைப்படங்களில் நடித்து வருவதால் அது சாத்தியமற்றுவிட்டது. இந்நிலையிலையே ஷிவாங்கிக்கு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விஜய் டிவி சார்பில் கலந்துகொண்ட எந்த போட்டியாளரும் இதுவரை பிக் போஸ் டைட்டிலை வெல்லாத நிலையில், அதிகளவான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவாங்கியால் மட்டுமே அதை சாதித்து காட்ட முடியும் என நம்பப்படுகிறது.

Sivaangi, Cooku with Comali, Bigg Boss Tamil 5,