ரஜினிக்காக கதையுடன் காத்திருக்கும் பிரபல வெற்றிப்பட இயக்குனர்

Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

இந்நிலையில், ரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும் என தெரிவித்துள்ளார் ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து `பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர், ரஜினியை வைத்துப் படம் இயக்குவதற்காகக் கதை வைத்துள்ளீர்களா? என கேட்டதுக்கு பதிலளிக்கையில், “ரஜினி சாருக்கு கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்துக்கு பிறகு அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க முடியவில்லை. ரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும்” அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

alphonse puthren