கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று நிதியுதவி

Rajinikanth, corona relief fund : கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில், இதுவரை நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த நிதியுதவியை வழங்கினார் ரஜினிகாந்த்.

Rajinikanth, corona relief fund,
Rajinikanth, corona relief fund,