நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Nitish Veera, Coronavirus : பல்வேறு காரணங்களால் திரைத்துறையை சேர்ந்த பலர் இறந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். நிதிஷ் வீரா. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். நடிகரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Nitish Veera, Coronavirus,