படங்கள் குறைந்ததால் கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், திடீரென கவர்ச்சிக்கு மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறிவந்தார்.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. உடல் எடையை குறைத்ததிலும் தோற்றம் மாறியது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படுக்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Keerthy Suresh