ஹீரோவாக அறிமுகமாகிறார் பிரபல நடிகரின் சகோதரர்

Rana, abhiram daggubati : பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராணாவின் சகோதரரான அபிராம் டகுபதி, தன் தந்தை தயாரிக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நடிகர் அபிராம் டகுபதி, ஸ்ரீ ரெட்டியின் மீ டூ புகாரில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அபிராம் டகுபதி கருத்து தெரிவிக்கையில் “என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது என் தாத்தாவின் ஆசை. அவர் உயிரோடு இருந்திருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும். தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் நான் ஹீரோவாக அறிமுகமாகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Rana, abhiram daggubati,