கமலுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட பிக் பாஸ் சனம் ஷெட்டி

Sanam Shetty, Bigg Boss Tamil : தேர்தல் தோல்வியினை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னவைத்து விலகி வருகின்றனன்ர்.

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக பிக் பாஸ் சனம் ஷெட்டி வெளியிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ” நீங்கள் இதுவரை வைத்திருந்த விசுவாசம் எங்கே போனது? உங்கள் எல்லோருக்கும் நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் நீங்கள் கட்சியிலிருந்து விலகி இருப்பீர்களா? கட்சியிலிருந்து விலகிய நீங்கள் கமல் அவர்களுக்கு மட்டும் நம்பிக்கை துரோகம் செய்யவில்லை, உங்களை நம்பி முதல் முறையாக வாக்களித்த இளைஞர்களையும் ஏமாற்றி விட்டீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.