ரஜினி மகள் கொடுத்த ரூ.1 கோடி குறித்து கஸ்தூரியின் அரசியல் கருத்து

Soundarya Rajinikanth, coronavirus, kasturi, corona : தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தமிழக அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தனது கணவருடன் சேர்ந்து முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூபாய் 1 கோடிக்கான காசோலையை கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து செளந்தர்யா ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் “ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் மற்றும் அவருடைய தந்தை சூலூர் வணங்காமுடி ஆகியோர் தமிழக முதல்வர் நிவாரண பணிக்கு ரூபாய் ஒரு கோடி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அபெக்ஸ் லேபரட்டரி சொந்தமாக உள்ளது. மேலும் விசாகனின் குடும்பம் திமுகவினருக்கு மிகவும் நெருக்கமானது” என்று தெரிவித்துள்ளார்.

Soundarya Rajinikanth, coronavirus, kasturi, corona,