இன்னும் ஓரிரு நாளில் படப்பிடிப்பு முடிகிறது சென்னை திரும்புகிறார் ரஜினி

Annaatthe, Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் 7-ந்தேதி ரஜினிகாந்த் தனி விமானத்தில் ஐதராபாத் சென்று தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். அதனைத்தொடர்ந்து நயன்தாராவும் சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்தார்.

ரஜினிகாந்தும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு ஓரிரு நாளில் சென்னை திரும்புகிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார்.

Annaatthe, Rajinikanth,