லாக்டவுனில் விஷாலின் அதிரடி முடிவு – Vishal

Vishal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது தாயின் தேவி அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டிருப்பதால், தினமும் 500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார் விஷால். இந்த உணவு பொருட்களை தேவி அறக்கட்டளைையின் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல இடங்களில் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி வருகிறார். அதுபோல், உணவின்றி தவித்து வரும் சாலையோர கால்நடைகளுக்கும் உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.