நடிகையின் அதிமேதாவித்தனம் – டுவிட்டர் முடக்கத்தை அடுத்து கங்கனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம் – Kangana Ranaut

Kangana Ranaut : ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்ட நிலையில் டுவிட்டரை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராமில் கங்கனா ரனாவத் பதிவு செய்த ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸ் என்பது சாதாரண ஃப்ளூ காய்ச்சல் போன்றதுதான் அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்று பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு பெரும் சர்ச்சையானதை அடுத்து தற்போது அவருக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. கொரோனா வைரஸ் என்பது சாதாரண காய்ச்சல் என்ற நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவுக்கு பல கண்டனங்கள் குவிந்து உள்ளதை அடுத்து இன்ஸ்டாகிராம் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Kangana Ranaut