தனுஷ் பட நடிகைக்கு கொரோனா – வீட்டில் தனிமைப்படுத்தலில்?

Dhanush, Tamil Cinema News : கொரோனா பாதிப்பு திரைத்துறையை சேர்ந்த பலரையும் தாக்கி வருகிறது. இதனால் பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

Ammu Abhirami asuran movie

இது குறித்து நடிகை அம்மு அபிராமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை நானே தனிமை படுத்துக்கொண்டேன். மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக மீண்டும் குணமாகி திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், அதிக கவனமாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.