தொடரும் ‘வாத்தி கம்மிங்’ பாடலின் சாதனைகள்

vaathi coming, master, vijay, vijay sethupathi : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கரத்தில், விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிளாக்பஸ்டர் ஹிட் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் இப்போதும் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComing என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி கொண்டாடிவருகின்றனர்.

மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் 150 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய முதல் வீடியோ பாடல் என்ற சாதனையையும் வாத்தி கம்மிங் பாடல் படைத்துள்ளது.

vaathi coming, master, vijay, vijay sethupathi,