ஓடிடியில் தனுஷின் அடுத்த படம் ரிலீஸ், வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Dhanush, Jagame Thandhiram, Karnan : சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒய்நாட் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவான ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.