திரையரங்குகள் மூடியதால் முடங்கிய திரைப்படங்கள்

cine news in tamil, Today Tamil Cinema News In Tamil :இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவுவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகே மீண்டும் திரையரங்குகளை திறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திரைத்துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. .

இதனைத்தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய நிலையில் படம் நிறுத்தப்பட்டதால் லாபத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் திரைக்கு வர தயாராக இருந்த பல புதிய படங்கள் முடங்கி உள்ளன. அந்தவகையில் பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த “எம்.ஜி.ஆர். மகன்”, விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள “தலைவி”, விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் “தர்பார்”, மற்றும் “லாபம்”, சிம்பு நடித்துள்ள “மாநாடு”, சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்”, விக்ரம் பிரபுவின் “டாணாக்காரன்”, அதர்வா நடித்துள்ள “குருதி ஆட்டம்”, ஆர்யாவின் “சர்பட்டா பரம்பரை”, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “கிரேட் இந்தியன் கிச்சன்” உள்ளிட்ட படங்களும், 50 சிறுபட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் தியேட்டர்களை மூடியுள்ளதால் முடங்கி உள்ளன.

கடந்த வருடம் கொரோனா முதல் அலையில் தியேட்டர்கள் 8 மாதங்கள் மூடப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.