பிரபல நடிகரின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆரி ஒப்பந்தம்

Aari Arjunan : தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகர் ஆரியின் வாழ்வில் அதிக ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் ஆரி அடுத்து, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் ஆரி என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும்.