டப்பிங்கின் போது குறும்பு செய்யும் ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரல் வீடியோ

Pugazh, Cooku With Comali : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ பிரபலமான புகழ் , தற்போது விஜய்சேதுபதி மற்றும் சிம்பு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட புகழின் வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்காக டப்பிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் அழுதவாறே டப்பிங் செய்து கொண்டு அவ்வப்போது அவரது வழக்கமான சேட்டையையும் செய்கிறார்.