யோகி பாபு உட்பட படக்குழு மீது முறைப்பாடு பதிவு

Yogi Babu, Mandela : நடிகர் யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மண்டேலா”. இந்நிலையில், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதில் “நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Yogi Babu, Mandela,