சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வெளியிடு தள்ளிப்போகிறது?

sivakarthikeyan, doctor : கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் டாக்டர்.

தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை அனிருத். இப்படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை தேர்தலுக்கு பின் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

sivakarthikeyan, doctor,