கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்

Nawazuddin Siddiqui, Aaliya, Petta : ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து நவாசுதீன் சித்திக்குக்கு ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆலியா “சில வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அப்போது நவாசுதீன் தான் குழந்தைகளை பார்த்துக்கொண்டார். என்னையும் நன்றாக கவனித்துக்கொண்டார். நல்ல தந்தையாகவும், கணவனாகவும் அவர் இருந்தார். என்னிடம் அன்பாக இருக்கிறார். அப்போது அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். இபோது நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.