மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் இருந்து பிரபல இயக்குனர் விலகல்

Navarasa, KV Anand, vasanth, Mani Ratnam : கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இயக்குனர் மணிரத்னம் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை இயக்குனர்கள் கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜுன் , அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குவதாக இருந்தது.

இந்நிலையில், இந்த ஆந்தாலஜி படத்திலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளாராம். அவருக்கு பதிலாக பிரபல இயக்குனர் வசந்த் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் வசந்த் இயக்கும் பகுதியில் அருவி பட நடிகை அதிதி பாலன் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற உள்ளது.

Navarasa, KV Anand, vasanth, Mani Ratnam,