நடிகை ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த ‘பெரிய நடிகர்’!

Metoo , Shalu Shamu : ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஷாலு ஷம்மு கவர்ச்சிக்கும், சர்ச்சைகளுக்கும் பிரபலமானவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மீடூவால் பாதிக்கப்பட்டதாகவும், விஜய்தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மீடூ புகாரை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள குறித்த பதிவில், “பெரிய நடிகர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள அழைக்கும் போது ,அதனை நிராகரித்தால் நடிகையின் திறமைகள் நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் காம்ப்ரமைஸ் செய்யமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Metoo , Shalu Shamu