நடிகர் மமுட்டியின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நடிகை தற்போது அவருடனே இணைந்து நடிக்க ஒப்பந்தம்!

Mammootty, Parvathy : மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகும் புழு படத்தை அறிமுக இயக்குனர் ரதீனா இயக்குகிறார்,

இந்நிலையில் இத்திரைப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க மலையாள நடிகையான பார்வதி ஒப்பந்தமாகி உள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது தான் முதன்முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் மமுட்டியின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை பார்வதி பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருடனே இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Mammootty, Parvathy,