சிம்புவும், விக்ரமும் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

Simbu, Maanaadu, Vikram, cobra : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கோப்ரா. இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இவ்விரண்டு திரைப்படங்களையும், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu, Maanaadu, Vikram, cobra,