ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்

Vijay Sethupathi : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது இத்திரைப்படம்.

vijay sethupathi

புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர், இந்தப் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

இந்நிலையில், உப்பென்னா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், உலகளாவிய மொத்த வசூலில் ‘உப்பென்னா’ திரைப்படம் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

vijay sethupathi